ஆதிதிராவிடர்கள் பாதிக்கப்பட்டால் ஆணையத்துக்கு வர வேண்டும்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், பட்டியல் இனத்தவர்களுக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் வடேபள்ளி ராமசந்தர் தலைமையில், ஆதிதிராவிடர் மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.இதில், கலெக்டர் கலைச்செல்வி, எஸ்.பி., சண்முகம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். பட்டியலின மக்களுக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் செயல்பாடு மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.இக்கூட்டத்தில் ஆணையத்தின் உறுப்பினர் வடேபள்ளி ராமசந்தர் கூறியதாவது:வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் மற்றும் வழக்குகள் குறித்தும், மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாள்ரிடம் ஆலோசனை நடத்தினோம்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு தேவையான நிலம் மற்றும் கல்வி, சமுக நலன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக செயல்படுத்தப்படுகிறது.திட்டப் பணிகள், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வங்கிக் கடன் உதவிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கலெக்டர் சிறப்பாக செய்து வருகிறார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், ஆணையத்திற்கு வர வேண்டும். ஆணைத்திற்கு வந்து புகார் அளித்தால் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்.பிரதான் உஜ்வால் யோஜ்னா திட்டத்தில், ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட எரிவாயு இணைப்புக்கு, ஆதிதிராவிடர் மக்கள் எரிவாயு இணைப்பு கேட்டு விண்ணப்பங்கள் ஏதும் வழங்கியிருந்தால், அவர்களுக்கு உடனே வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.