உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

 தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில், தி.மு.க.,வினர் திட்டமிட்டு முறைகேடு செய்வதாக குற்றஞ்சாட்டி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே, அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தி.மு.க.,வினர் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளில் முறைகேடு செய்வதாக, அ.தி.மு.க., குற்றஞ்சாட்டி வருகிறது. தி.மு.க.,வினரின் அராஜக போக்கை கண்டித்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே, அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தும் என, பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே, காஞ்சிபுரம் மாவட்ட செயலர் சோமசுந்தரம் தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், அமைப்பு செயலர்கள் மைதிலி, கணேசன், முன்னாள் அ.தி.மு.க., - -எம்.எல்.ஏ., பழனி, முன்னாள் அ.தி.மு.க.,- - எம்.பி., பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில், தி.மு.க.,வினர் செய்யும் முறைகேடுகளை சுட்டிக்காட்டி, அ.தி.மு.க., நிர்வாகிகள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.,வை கண்டித்து பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்