மேலும் செய்திகள்
இருக்கை வசதி இல்லாமல் வாலாஜாபாதில் பயணியர் அவதி
4 minutes ago
லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி
20 minutes ago
சாலை விபத்தில் மூதாட்டி பலி
21 minutes ago
சத்ய சாய்பாபா பிறந்தநாள் விழா
21 minutes ago
வாலாஜாபாத்: ஊத்துக்காட்டில் எஸ்.ஐ.ஆர்., பணியில் ஒரே இடத்தில் அமர்ந்து விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், நேற்று அப்பகுதியில் வாக்காளர்களை சந்திக்க வீடு, வீடாக செல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ததது குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதி அரசியல் கட்சியினர் கூறியதாவது: எஸ்.ஐ.ஆர்., பணியில் வாக்காளர் குறித்த படிவங்களை ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று தனித் தனியாக ஒவ்வொரு வாக்காளரிடத்தில் வழங்க வேண்டும். பூர்த்தி செய்த அப்படிவங்களை ஒவ்வோரு வீடாக சென்று ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெற வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், ஊத்துக்காடு குறிப்பிட்ட சில தெருக்களில் தி.மு.க., கிளை செயலர், ஊராட்சி செயலர் மற்றும் மக்கள் நலப் பணியாளர் உள்ளிட்டோர் ஒரே இடத்தில் அமர்ந்து வாக்காளர் குறித்தான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்குகின்றனர். இவ்வாறான செயல் மூலம் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இப்பகுதியில் தேர்தல் ஆணையம் விதிகளின் படி முறையாக எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடைபெற சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
4 minutes ago
20 minutes ago
21 minutes ago
21 minutes ago