உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இன்று கூடுதலாக 150 பஸ்கள் இயக்கம்

இன்று கூடுதலாக 150 பஸ்கள் இயக்கம்

சென்னை:சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில், மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 150 பேருந்துகள், இன்று கூடுதலாக இயக்கப்படும் என, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - கோடம்பாக்கம் ரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடக்கின்றன.அதனால், இத்தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.பயணியர் நலன் கருதி வழக்கமாக இயங்கும் மாநகர பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ