உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நுாலகத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்

நுாலகத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, தேனம்பாக்கம் பாரதிதாசன் நகரில் கடந்த 2010-11ல், 3.60 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நுாலகம் கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் நுாலகத்தை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், அதே பகுதியில் சத்யா நகரில் துவக்கப்பட்ட அங்கன்வாடி மையம், பல்வேறு இடங்களில் வாடகை கட்டடங்களில் இயங்கி வந்தது. அங்கன்வாடி மையத்திற்கு என, சொந்த கட்டடம் இல்லாததால், நுாலகத்தில் இருந்த புத்தகங்கள் அகற்றப்பட்டு, நுாலக கட்டடத்திற்கு அங்கன்வாடிமையம் இடமாற்றம் செய்யப்பட்டது.போதுமான இடவசதி இல்லாமல், குறுகலான நுாலக கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்குவதால், இங்கு பயிலும் குழந்தைகள் ஆடி, பாடி விளையாடி கல்வி கற்க முடியாத முடியாத சூழல் உள்ளது.மேலும், கழிப்பறை வசதியும் இல்லாததால், இங்கு பயிலும் குழந்தைகள் திறந்தவெளியை இயற்கை உபாதை கழிக்க பயன்படுத்த வேண்டிய அவலநிலை உள்ளது. அங்கன்வாடி மைய ஊழியர்கள், மாநகராட்சி பூங்காவில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, நுாலக கட்டடத்தில் இயங்கும், சத்யா நகர் அங்கன்வாடி மையத்திற்கு என, நவீன வசதிகளுடன் புதிய அங்கன்வாடி மையம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, நுாலக கட்டடத்தில், பழையபடி மீண்டும் நுாலகம் இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாரதிதாசன் நகரினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ