உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பிரசாரம்

காஞ்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பிரசாரம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்தது.நிகழ்ச்சி துவக்கத்தில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழியை அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்,அதை தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர் முறை விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, கையெழுத்திட்டு துவக்கி வைத்து விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் வெளியிட்டார்.அதைத் தொடரந்து, பள்ளி இடைநின்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கியும், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேலும், விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் கலைச்செல்வி கொடியசைத்து துவக்கி வைத்தார்இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்யா, தொழிலாளர் உதவி ஆணையர் சுதா, தொழிலாளர் துணை ஆய்வாளர் ராஜகோபால், மாணவ- - மாணவியர் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி