உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் குளமாக மாறிய ஆரம்பாக்கம் சாலை

மழைநீர் குளமாக மாறிய ஆரம்பாக்கம் சாலை

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், சாலமங்கலம் அடுத்த ஆரம்பாக்கம் சந்திப்பில் இருந்து பிரிந்து செல்லும் ஆரம்பாக்கம் சாலை வழியே, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.காஞ்சிவாக்கம், நாட்டரசம்பட்டு, சிறுவஞ்சூர், உமயாள்பரணஞ்சேரி, நாவலுார் உள்ளிட்ட கிராமத்தினர், இந்த சாலை வழியே படப்பை, தாம்பரம் பகுதிகளுக்கு கார், பைக் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர்.தவிர, தனியார் பள்ளி பேருந்துகள் சென்று வருகின்றன. போக்குவரத்து அதிகமுள்ள பிரதான சாலையில், ஆங்காங்கே சாலை சேதடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அதேபோல், சமீபத்தில் பெஞ்சல் புயலால் பெய்த மழையின் போது, பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரால், இந்த சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.இதில், தார்ச்சாலை வெள்ள நீரில் சேதமடைந்து, ராட்சத பள்ளம் ஏற்பட்டது. தற்போது, சாலையோரம் அபாயகரமான பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் பேருந்துகள், விபத்தில் சிக்கும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, பெரும் விபத்திற்கு முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆரம்பாக்கம் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியின் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ