உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போதையில் பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

போதையில் பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செவிலிமேடு, ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன், 36. ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் வெங்கடாபுரம் சாலையில், அங்குள்ள பம்ப் செட் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார்.அப்போது, அருகே மது அருந்திக் கொண்டிருந்த, செவிலிமேடைச் சேர்ந்த கார்த்திகேயன், 37, என்பவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.இதில், ஆட்டோ ஓட்டுனர் அன்பழகனை, கார்த்திகேயன் பீர்பாட்டிலால் தாக்கியதில் காயமடைந்தார். இதுகுறித்து, காஞ்சி தாலுகா போலீசில் அன்பழகன் புகார் அளித்ததை தொடர்ந்து, 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்யேனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை