உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி அருகே டாஸ்மாக் சேந்தமங்கலத்தில் அவதி

பள்ளி அருகே டாஸ்மாக் சேந்தமங்கலத்தில் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு, பின்னாவரம், சித்துார், கணபதிபுரம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கு வருகின்றனர்.இந்த பள்ளியில் இருந்து, 100 மீட்டர் தொலைவில், அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.சேந்தமங்கலம் கிராமத்தை சுற்றியுள்ள மக்கள் மற்றும் சேந்தமங்கலம் பஜார் பகுதியில் இருந்து, சித்துார், கணபதிபுரம், முருங்கை ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சேந்தமங்கலம் டாஸ்மாக் கடையை கடந்து செல்லும் போது, அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.குறிப்பாக, இரவு நேரங்களில் பள்ளி படிப்பு மற்றும் உயர் கல்வி படித்துவிட்டு வீடு திரும்புவோருக்கு, 'குடி'மகன்களால் அச்சம் ஏற்படுகிறது. வாகனங்களில் செல்வோரை, 'குடி'மகன்கள் வம்பிழுப்பதாக சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புலம்புகின்றனர்.எனவே, சேந்தமங்கலம் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றித்தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை