உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாநகராட்சிக்கு வரி இனங்கள் செலுத்த காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு பேனர்

மாநகராட்சிக்கு வரி இனங்கள் செலுத்த காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு பேனர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகள், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, இப்பகுதியில் உள்ள கட்டடங்களுக்கு சொத்து வரி, காலி மனைகளுக்கான வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட வரி இனங்கள், மாநகராட்சி கருவூலம் மற்றும் வரிவசூல் மையங்கள் வாயிலாக வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், வரி இனங்களை செலுத்த வலியுறுத்தி மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வணிக உபயோக கட்டடங்களுக்கு, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை, இதுநாள் வரை செலுத்தாத கட்டட உரிமையாளர்கள், உடனடியாக மாநகராட்சி கருவூலத்தில் செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.மேலும், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வணிக பயன்பாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் தொழில் வரி, தொழில் உரிமம் விண்ணப்பித்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே தொழில்வரி, தொழில் உரிமம் பெற்றுள்ளவர்கள் புதுப்பித்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.எனவே, கட்டட உரிமையாளர்கள் சொத்து வரி நிலுவையை செலுத்தி உடனடியாக தொழில் வரி, தொழில் உரிமம் பெற விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.தவறும்பட்சத்தில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு விதியின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை