உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பாதுகாப்பான பேருந்து இயக்கம்; ஓரிக்கையில் விழிப்புணர்வு

 பாதுகாப்பான பேருந்து இயக்கம்; ஓரிக்கையில் விழிப்புணர்வு

காஞ்சிபுரம்: ஓரிக்கை பணிமனையில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர் களுக்கு 'பாதுகாப்பான பேருந்து இயக்கம்' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில், டிச., 15 முதல் 31ம் தேதி வரை, சாலை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்து கோட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட ஓரிக்கை தொழிற் கூடத்தில் அனைத்து தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், தகுதிசான்று மேலாளர் கருணாகரன், தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும், விபத்து இல்லாமல், பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தினார். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பேட்ஜ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், வணிக பிரிவு துணை மேலாளர் ஸ்ரீதர், உதவி மேலாளர் இளம்பரிதி, காஞ்சி புரம் பணிமனை கிளை மேலாளர் சீனிவாசன், காஞ்சிபுரம் பேருந்து நிலைய உதவி பொறியாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை