உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் நுாக்காலம்மன் கோவிலில் பாலாலயம்

உத்திரமேரூர் நுாக்காலம்மன் கோவிலில் பாலாலயம்

உத்திரமேரூர்:உத்திரமேரூரில், எல்.எண்டத்துார் சாலையில் உள்ளது நுாக்காலம்மன் கோவில். ஆண்டுதோறும், ஆடி மாதம் தீமிதி திருவிழா மற்றும் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.இக்கோவிலை விரிவுபடுத்தி கட்டமைக்க அப்பகுதியினர் தீர்மானித்தனர். அதன்படி, உத்திரமேரூர் நுாக்காலம்மன் கோவில் பராமரிப்பு மற்றும் விரிவாக்கப் பணி செய்ய நேற்று பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவையொட்டி காலை 9:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் யாகம் வளர்த்து வேள்வி பூஜைகள் நடைபெற்றன.அதைத் தொடர்ந்து கலசங்களில் புனித நீர் நிரப்பி, பாலாலயம் செய்யப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி