உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருமணம் கோரிய தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

திருமணம் கோரிய தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

குன்றத்துார்: திருமணம் செய்து வைக்கும்படி மது போதையில் தகராறு செய்த தம்பியை, அண்ணன் அடித்துக் கொன்ற சம்பவம், குன்றத்துாரில் நடந்துள்ளது. குன்றத்துார் அருகே கொழுமணிவாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் கோபால், 35; சரக்கு வேன் ஓட்டுநர். திருமணம் ஆகவில்லை. தினமும் மது போதையில் வீட்டுக்கு வரும் கோபால், பிளம்பர் வேலை செய்து வரும் தன் அண்ணன் ஹரிதாசிடம், 37, தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அண்ணன், தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த கோபால், மீண்டும் தகராறு செய்தார். இதனால், ஆத்திரம் அடைந்த ஹரிதாஸ், கட்டையால் சரமாரியாக கோபாலை தாக்கினார். சம்பவ இடத்திலேயே கோபால் இறந்தார். மாங்காடு போலீசார் வழக்கு பதிந்து, ஹரிதாசை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !