| ADDED : பிப் 23, 2024 01:16 AM
சேலையூர், சேலையூர் அடுத்த சந்தோஷபுரம், நேரு தெருவைச் சேர்ந்தவர் ரகுராம், 42, ஐ.சி.எப்., தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர், குடும்பத்துடன் வேலுாருக்கு சென்றுள்ளார்.நேற்று காலை, பக்கத்து வீட்டில் வசிப்போர் பார்த்தபோது, ரகுராம் வீட்டின் 'கிரில் கேட்' மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.தகவலறிந்து வந்த ரகுராம், பீரோவில் இருந்த மூன்றரை சவரன் நகை, 1.50 லட்சம் ரூபாய் திருடுபோனதாக, சேலையூர் போலீசில் புகார் அளித்தார்.அதேபோல், பக்கத்து வீட்டில் வசித்து வரும் மென்பொறியாளரான பாலாஜி, 37, என்பவரது வீட்டிலும், பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 2 மடிக்கணினி, 1 லட்சம் ரூபாய் பணம், ஐந்து வெள்ளி கொலுசு ஆகியவற்றை, திருடிச் சென்றனர்.