மேலும் செய்திகள்
உத்திரமேரூர் சாலை வளைவில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை
6 minutes ago
பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்
11 minutes ago
பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
19 minutes ago
அய்யப்பனுக்கு மலர் பூஜை
22 minutes ago
பயணியர் மழை, வெயிலில் திறந்த வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. காஞ்சிபுரம் காந்தி சாலையில், ஆடிசன்பேட்டை பேருந்து நிறுத்தம் உள்ளது. காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமத்தினர், அத்தியாவசிய தே வைக்காக காஞ்சிபுரம் வருவோர், தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு, ஆடிசன்பேட்டை பேருந்து நிறுத்தம் வழியாக செங்கல்பட்டு, உத்திரமேரூர், வந்தவாசி செல்லும் வழித்தட பேருந்துகளி ல் பயணித்து வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்லும் ஆடிசன்பேட்டை பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை அமைக்கவில்லை. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் மழை, வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், கர்ப்பிணியர், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள், சிறுவர்கள், நீண்டநேரம் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதேபோல, மழைக்காலங்களிலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, காஞ்சிபுரம், காந்தி சாலையில் உள்ள ஆடிசன்பேட்டை பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை அமைக்க காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், எம்.பி., செல்வம் ஆகியோர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
6 minutes ago
11 minutes ago
19 minutes ago
22 minutes ago