உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டிராக்டர் மீது கார் மோதி விபத்து சிறுமி உயிரிழப்பு 4 பேர் காயம்

டிராக்டர் மீது கார் மோதி விபத்து சிறுமி உயிரிழப்பு 4 பேர் காயம்

செங்குன்றம்:பொன்னேரி அடுத்த மீஞ்சூரைச் சேர்ந்தவர்கள் சண்முகம், அவரது மனைவி மகேஸ்வரி, மகள் கவி வர்ஷா, 17, மகன் கவி வர்ணிஷ், 18. இவர்கள், சென்னையில் இருந்து 'டாடா சபாரி' காரில், நேற்று மீஞ்சூரில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.வண்டலுார் - -மீஞ்சூர் புறவழிச்சாலையில், செங்குன்றம் அடுத்த நல்லுார் அருகே முற்பகல் 11:30 மணி அளவில், முன்னால் சென்ற டிராக்டர் மீது, அதே திசையில் வேகமாக வந்த சண்முகத்தின் கார் கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது.இதில், சாலையோரம் துாக்கி வீசப்பட்ட கார் உருக்குலைந்தது. இந்த விபத்தில் கவி வர்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; மற்ற மூவரும் படுகாயமடைந்தனர். அதே போன்று, சோழவரத்தைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் சந்தோஷ், 22, என்பவரும் காயமடைந்தார்.இதில், கவி வர்ணிஷ் தனியார் மருத்துவமனையிலும், மற்றவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி