மேலும் செய்திகள்
இன்று இனிதாக (11.09.2025) காஞ்சிபுரம்
51 minutes ago
சிறப்பு மருத்துவ முகாம் 2,118 பேர் பங்கேற்பு
1 hour(s) ago
தொழிற்சாலை பஸ் மோதி 8 பசு மாடுகள் உயிரிழப்பு
23 hour(s) ago
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மாட்டுப்பொங்கல் விழா நேற்று விமரிசையாக நடந்தது.காஞ்சியில் மஹா பெரியவர் மற்றும் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சன்னிதிக்கு சிறப்பு தீபாராதனைகள் மற்றும் வஸ்திரங்கள் சமர்ப்பித்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டன.காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீ கார்யம் செல்லா விசுவநாத சாஸ்திரி, மேலாளர் சுந்தரேச அய்யர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பசுக்களுக்கு பொங்கல், பழங்கள் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டன.தொடர்ந்து, ஊழியர்களுக்கு சங்கரமடம் சார்பில் புத்தாடை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டதுஇதில் சங்கரமட நிர்வாகி கீர்த்தி வாசன், கோசாலை ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக மஹா பெரியவர் உத்தரவின்படி மாட்டுப் பொங்கல் தினத்தன்று திருவாரூர் சந்திரசேகரன் குடும்பத்தினர் சார்பில், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய வரிசை தட்டுகளாக சங்கர மடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக தொடர்ந்து இந்த சேவையை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
51 minutes ago
1 hour(s) ago
23 hour(s) ago