| ADDED : ஜன 29, 2024 04:05 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. இக்கோவிலில் 1,014வது திருவவதார மஹோற்சவம் கடந்த 22ல், திருப்பல்லக்கு ஆஸ்தான புறப்பாடுடன் துவங்கியது.தினமும் காலையில் பல்லக்கிலும், இரவு சிம்மம், யாளி, மங்களகிரி, சூரிய பிரபை உள்ளிட்ட வாகனங்களில் உலா வந்தார்.ஆறாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு, குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கூரத்தாழ்வான், முக்கிய வீதி வழியாக உலா வந்தார். விழாவில், ஒன்பதாம் நாள் முக்கிய உற்சவமான தேரோட்டம் நாளை நடக்கிறது.இதில், காலை 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் கூரத்தாழ்வான் எழுந்தருளி, முக்கிய வீதி வழியாக பவனி வருகிறார்.மாலை 3:00 மணிக்கு திருமஞ்சனமும், திருப்பாவை சாற்றுமறை நடக்கிறது. இரவு ஹம்ஸ வாகனமும், திருமொழி சாற்றுமறையும் நடக்கிறது.