உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிவுநீர், குப்பை கழிவுகளால் சீரழியும் செரப்பனஞ்சேரி ஏரி

கழிவுநீர், குப்பை கழிவுகளால் சீரழியும் செரப்பனஞ்சேரி ஏரி

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், செரப்பணஞ்சேரி ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 350 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி இப்பகுதியில் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன பெறுகிறது. அப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.இந்நிலையில், வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த ஏரியில், ஒரகடம் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து, இரவு நேரங்களில் சரக்கு வாகனங்களில், தொற்சாலை கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டுகின்றனர்.செரப்பனஞ்சேரி, வஞ்சுவஞ்சேரி, காரணித்தாங்கள் பகுதிகளில் இயங்கிவரும் கோழி இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளையும் ஏரியில் கொட்டுகின்றனர்.தவிர, காரணித்தாங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மழைநீர் வடிகால் வழியாக நேரடியாக ஏரியில் கலக்கிறது.இதனால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது. மேலும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த நீரை பருகும் கால்நடைகள் நோய்வாய் ஏற்படும் அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். விவசாயம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, தொழிற்சாலை கழிவுகளை மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ