சாலையோரம் கோழி கழிவுகள் பொன்னேரிக்கரையில் சீர்கேடு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து பரந்துார், சிறுவாக்கம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள், பொன்னேரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றன.வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையோரம், கோழி இறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ளது.மூட்டையில் இருந்து சிதறிய கோழி கழிவுகளால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலை உள்ளது. இச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, பொன்னேரிக்கரை சாலையோரம் போடப்பட்டுள்ள கோழி இறைச்சி கழிவுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.