மேலும் செய்திகள்
புத்தேரியில் குடிநீர் நிரப்பாததால் வீணாகும் கால்நடை தொட்டி
22 hour(s) ago
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, நாயக்கன்பேட்டை கிராமத்தில், சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் தேரோட்டம் நடைபெறும்.நடப்பாண்டிற்கான உற்சவம், நேற்று, காலை 8:00 மணிக்கு, சிவசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து, 9:00 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேர் வடம் பிடித்து, அரோகரா, அரோகரா என, கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் இழுத்தனர்.தேர், பெரிய தெரு, சின்ன தெரு, ஆற்றங்கரை தெரு, நடுத் தெரு ஆகிய முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
22 hour(s) ago