உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சேதமடைந்த சாலையில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் உருளையால் விபத்து அபாயம்

 சேதமடைந்த சாலையில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் உருளையால் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்: பிள்ளைப்பாக்கத்தில் சேதமடைந்த சாலையில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் உருளையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து குன்றத்துார் வழியாக போரூர் செல்லும் சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காடில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக இந்த சாலை உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டார பகுதிகளில் மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால் பிள்ளைப்பாக்கம் சாலை சந்திப்பு அருகே, சாலை சேதமடைந்து பள்ளமாக மாறியது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வந்தனர். விபத்தை தவிர்க்க சிமென்ட் உருளையை, அப்பகுதி மக்கள் சாலை நடுவே வைத்துள்ளனர். இதனால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ