உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரும் 19ல் மாநகராட்சி கூட்டம்

வரும் 19ல் மாநகராட்சி கூட்டம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமிக்கு எதிராக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இதனால், மேயர் மகாலட்சுமி மீது கடந்த ஜூலை மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, கடந்த செப்., 3ம் தேதி மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டது.அதில், விவாதம் நடத்தாமல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மேயர் மகாலட்சுமி மீது கவுன்சிலர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, அடுத்தகட்டமாக வரும் 19ம் தேதி மாநகராட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான தீர்மான நகல்கள், 51 கவுன்சிலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் 112 தீர்மானங்கள் இடம்பெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை