உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரச மரச்செடி வளர்ந்துள்ளதால் போலீஸ் குடியிருப்பு சுவரில் விரிசல்

அரச மரச்செடி வளர்ந்துள்ளதால் போலீஸ் குடியிருப்பு சுவரில் விரிசல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், சிவ காஞ்சி போலீஸ் நிலையம் பின்புறம், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் சார்பில், போலீசாருக்கான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு வெளிமாவட்டங்களில் இருந்து, காஞ்சிபுரத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு பணி மாறுதலாகி வந்துள்ள போலீசார், தங்களது குடும்பத்தினருடன் தங்கி உள்ளனர்.முறையான பராமரிப்பு இல்லாததால், அடுக்குமாடி குடியிருப்பின் தளத்தில் அரசமரச் செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகளின், வேர்களால் சுவரில் விரிசல் ஏற்பட்டு வருகிறது நாளடைவில், கட்டடம் வலுவிழக்கும் சூழல் உள்ளது.எனவே, பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள போலீசாருக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் வளர்ந்து வரும் அரசமரச் செடிகளை வேருடன் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை