உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் கால்வாய் பாலம் சேதம்

மழைநீர் கால்வாய் பாலம் சேதம்

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம்கடல்மங்கலம் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மருதம் -- தோட்டநாவல் சாலையில் இருந்து பிரிந்து, பிள்ளையார் கோவில் சிமென்ட் சாலை செல்கிறது.இந்த இரு சாலையும்இணையும் இடத்தில்,மழைநீர் வடி கால்வாய் மீது சிறுபாலம் கட்டப்பட்டு,பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது, சிறு பாலம் சேதமடைந்து, பள்ளம் ஏற்பட்டுள்ளது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டி கள், அடிக் கடி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, உடைந்த சிறு பாலத்தை சரிசெய்ய,பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தும், துறை அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.மழை நேரங்களில்வடிகால் வாயில் செல்லும் தண்ணீர், பாலத்தின் உடைந்த பகுதியின் வழியே வெளியேறி, சாலையில் தேங்கி நிற்கிறது.இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்த சிறுபாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை