சேதமடைந்த நெமிலி சாலை
ஸ்ரீபெரும்புதுார்: சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, நெமிலி வழியாக, மண்ணுார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக வளர்புரம், பாப்பரம்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராமத்தினர் மற்றும் மாணவ - மாணவியர் ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலையில், தொழிற்சாலைகளுக்கு வரும் கனரக வாகனங்கள், தனியார் பேருந்துகள் அதிகம் செல்வதால், சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், பல்லாங்குழியாக உள்ள சாலையில் செல்லும் போது, எதிர்பாராத விதமாக தடுமாறி சாலையில் விழுந்தால், கனரக வாகனங்களில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, ஸ்ரீபெரும்புதுார் -- மண்ணுார் இடையே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.