உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இருள்நீக்கி ஈஸ்வரர் கோவில் தீர்த்த குளம் மாயமான அவலம்

இருள்நீக்கி ஈஸ்வரர் கோவில் தீர்த்த குளம் மாயமான அவலம்

ஸ்ரீபெரும்புதுார்:எறையூர் இருள்நீக்கி ஈஸ்வரர் கோவில் தீர்த்த குளம் போதிய பராமரிப்பின்றி துார்ந்துள்ளதால், சீரமைத்து பராமரிக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட எறையூர் கிராமத்தில், பழமையான இன்பாம்பிகை உடனுறை இருள்நீக்கி ஈஸ்வரர் கோவில் உள்ளது. 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களும், சிவலிங்களும் உடைய இக்கோவிலுக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.இந்த நிலையில், கோவில் எதிரே உள்ள தீர்த்தகுளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் துார்ந்து உள்ளது. இதனால், குளம் முழுவதும் புதர் மண்டி சீரழிந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவில் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை