| ADDED : நவ 16, 2025 01:56 AM
காஞ்சிபுரம்: 'பிரதமர் ஜன்மன்' திட்டத்தில் கட்டிய வீடுகளுக்கு, சாலை, குடிநீர், மின்சாரம் ஆகிய வசதிகள் ஏற்படுத்த, சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. பகவான் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாள் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வீரர்கள் நினைவு கூறும் வகையில், ஜனஜாதியா கவுரவ் திவாஸ்' சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என, ஊரக வளர்ச்சி இயக்ககம் அறிவுரை வழங்கி இருந்தது. அதையடுத்து, காஞ்சிபுரம் மாவட் டத்தில், 95 ஊராட்சிகளில், நேற்று, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தன. பிரதமர் ஜன்மன் திட்டத்தில் கட்டிய வீடுகள் முன்னேற்றம்; தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் குறித்து விவாதம்; மகளிர் குழு கடனுதவி; அங்கவாடி மையம்; உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. தேவரியம்பாக்கம் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில், பிரதமர் ஜன்மன்' திட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதேபோல, காரை, திருப்புட்குழி, அவளூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் பழங்குடியினத்தவர்களின் குடியிருப்புகளில், சாலை, குடிநீர், மின் விளக்கு ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.