உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டில்லி ஏர் இந்தியா விமானம் தாமதம்

டில்லி ஏர் இந்தியா விமானம் தாமதம்

சென்னை, சென்னையில் இருந்து டில்லி செல்லும் 'ஏர் இந்தியா' விமானம், நேற்று காலை 6:00 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும். இந்த விமானத்தில் பயணிக்க, 158 பேர் காத்திருந்தனர்.இந்த விமானம், வழக்கமாக துபாயில் இருந்து அதிகாலை 4:40 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, மீண்டும் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து 6:00 மணிக்கு, டில்லிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் நேற்று, துபாயில் இருந்து மூன்று மணி நேரம் தாமதமாக வந்து, புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை