உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழுதான குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வலியுறுத்தல்

பழுதான குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வலியுறுத்தல்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்டுபெரும்பேடு ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள, அம்மன் கோவில் தெருவில், 10 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.இந்த நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, ஊராட்சி நிர்வாகத்தினர் முறையாக பராமரிக்கததால், கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் படி ஆபத்தான நிலையில் உள்ளது. குடிநீர் தொட்டி சில ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமலும் உள்ளது.எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !