உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா விமரிசை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

காஞ்சி சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா விமரிசை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

காஞ்சிபுரம்:மஹா சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.காஞ்சிபுரம் கைலாசநாதர்கோவிலில், பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கைலாசநாதர் முக்கிய வீதிகளில் உலா வந்தார்.காஞ்சிபுரம் திருக்காலிமேடு பிரமராம்பிகை சத்யநாதசுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. அம்பிகையுடன் மலர் அலங்காரத்தில், ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் சத்யநாதர், திருக்காலிமேடு, அல்லாபாத் ஏரிக்கரை, சின்ன காஞ்சிபுரம் பகுதியில் வீதியுலா வந்தார். பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து வழிபட்டனர்.காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெருவில் கோடி ருத்ரர்கள் வழிபட்ட ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் நான்கு கால சிறப்பு பூஜையும், அன்னதானமும், தேஜஸ் இன்ஸ்டிடியூட் நடனபள்ளி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.காஞ்சிபுரம் ஒன்றியம், கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில், மாலை 4:00 மணிக்கு பால்குட ஊர்வலமும், தொடர்ந்து பிரதோஷ வழிபாடு நடந்தது. இரவு 7:00 மணிக்கு முதற்கால பூஜை நடந்தது. செய்யார் ஆடலுாரார் சதாசிவ பிரதோஷ வழிபாடு சிவனடியார்கள் திருக்கூட்டம் குழுவினரின் கைலாய வாத்திய இசை நிகழ்ச்சி நடந்தது.காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் கிழக்கு கரை, அனுமந்தீஸ்வரர், யோக லிங்கேஸ்வரர், வீரஆஞ்சநேயர் கோவிலில் மாலை 5:00 மணிக்கு மஹா சிவராத்திரி சிறப்பு அபிஷேகம் நடந்து. விழாவிற்கான ஏற்பாட்டை பிரதோஷ வழிபாட்டு குழு மற்றும் காந்தமலை வாசன் சபா அய்யப்ப பக்தர்கள் செய்திருந்னர்.காங்சிபுரம் சர்வதீர்த்தம்வடகரை தவளேஸ்வரர் கோவிலில் ஐந்து கால சிறப்பு அபிஷேகம் நடந்தது. தேவாரம், திருவாசகம் பக்திபாடல்கள் பாடப்பட்டன.ஹிந்து சமய மன்றம், காஞ்சி காமகோடி பீடத்தின், சமய, கலை, கலாசார பண்பாட்டு சேவை அமைப்பு, சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், ஏனாத்துார், இரங்குமதீஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜை, ருத்ர பாராயணம், திருமுறை தேவார இன்னிசை, உழவாரப் பணி உள்ளிட்டவை நடந்தன.உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், அத்திலிங்க தரிசனம் நடந்தது. காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் கோவிலில், திருவண்ணாமலை கிரிவலக் குழுவின் சார்பில், இரவு முழுதும் சிவபூஜை மற்றும் திருவாசக முற்றோதல் நடந்தது.ராஜயோக தியான நிலையம், பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சாகர்பில், 88வது திரிமூர்த்தி சிவஜெயந்தி விழா நாராயண குரு திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், சோமநாதர், காசி விஸ்வநாதர், ஜோதிர்லிங்க தரிசனம் மற்றும் சஹஸ்ர லிங்க தரிசனம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை