| ADDED : ஜன 30, 2024 06:02 AM
சென்னை : டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், திருவள்ளூர் மாவட்ட லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. அந்த வகையில், முதலாவது டிவிஷன் போட்டியில், கொரட்டூர் சி.சி., மற்றும் அம்பத்துார் சி.சி., அணிகள் மோதின.முதலில் பேட் செய்த கொரட்டூர் சி.சி., அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 43.1 ஓவர்களில் ஆல் ஆவுட் ஆகி, 114 ரன்கள் அடித்தது. அடுத்து களமிறங்கிய அம்பத்துார் சி.சி., அணி, 45 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 115 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.நான்காவது டிவிஷன் போட்டியில், டி.வி.எஸ்., லுாகாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 29 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 138 ரன்களை அடித்தது. அடுத்து பேட் செய்த யுனைடெட் அணி, 30 ஓவர்களில், 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.