உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தோழி மகளிர் விடுதி உலக வங்கி குழு ஆய்வு

தோழி மகளிர் விடுதி உலக வங்கி குழு ஆய்வு

தாம்பரம்:தாம்பரம் சானடோரியம் தோழி மகளிர் விடுதியை உலக வங்கி குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.பணிக்கு செல்லும் பெண்கள் தங்க, அரசு சார்பில், 'தோழி' மகளிர் விடுதி கட்டப்படுகிறது. அந்த வகையில், உலக வங்கி நிதி உதவியுடன் தாம்பரம் சானடோரியம், ஜட்ஜ் காலனியில் தோழி விடுதி அமைக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக இதை திறந்து வைத்தார். இந்த விடுதியில், 60க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் தங்கும் வசதிகள் உள்ளன.இந்நிலையில், இந்த தோழி மகளிர் விடுதியை, உலக வங்கி குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். விடுதி செயல்படும் விதம், வசதிகள் குறித்து, உலக வங்கி குழுவினருக்கு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை செயலர் ஜெயஸ்ரீ, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா ஆகியோர் விளக்கி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி