| ADDED : பிப் 12, 2024 06:01 AM
திருப்பருத்திக்குன்றம்: காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருப்பருத்திக்குன்றம் நான்குமுனை சந்திப்பில், சாலையோரம் நிலத்தடியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரு நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், நீண்டநேரம் மின்மோட்டார் இயங்குவதால், மின்சாரம் விரயமாவதுடன், மின்மோட்டாரும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது.எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை திருப்பருத்திக்குன்றம் ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.