மேலும் செய்திகள்
வரும் 8ல் ஆலோசனை கூட்டம்
06-Sep-2024
காஞ்சிபுரம் : மதுரமங்கலம் அடுத்த, ஏகனாபுரம் கிராமத்தில், பரந்துார் விமான நிலையம் அமைவதற்கு, கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.பரந்துார் விமான நிலையத்திற்கு, ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை எடுக்க, தமிழக தொழில் வளர்ச்சி கழகம் செப்டம்பர் மாத துவக்கத்தில் அறிவிப்பு வெளியானது.இதைக் கண்டித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடந்தினர்.இந்நிலையில், பரந்துார் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது என, நேற்று காலை, காரை கிராமத்தில் இயங்கும் பரந்துார் விமான நில எடுப்பு அலுவலகத்திற்கு, ஏகனாபுரம் கிராமத்தினர் பெண்களுடன் வந்து, ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்தனர்.மனுக்களை பெற்றுக் கொண்ட வருவாய் துறையினரிடம், உங்கள் மனு அரசிற்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கூறி அனுப்பி வைத்தனர்.
06-Sep-2024