மேலும் செய்திகள்
பல்லாங்குழியான மொளச்சூர் சாலை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
10 minutes ago
பிரதான குழாயில் உடைப்பு சதாவரத்தில் வீணாகும் குடிநீர்
12 minutes ago
உத்திரமேரூர்: நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, உத்திரமேரூர் கருங்குட்டை சுடுகாட்டில் மின் விளக்கு அமைக்கப்பட்டுஉள்ளது. உத்திரமேரூர் பேரூராட்சி, காஞ்சிபுரம் செல்லும் சாலையோரத்தில் கருங்குட்டை சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் அப்பகுதியைச் சேர்ந்தோர் இறந்தால், அவர்களை புதைத்தும் எரியூட்டியும் வருகின்றனர். இங்கு, நீண்ட நாட்களாக மின் விளக்கு வசதி இல்லாமல் இருந்தது. இதனால், இரவு நேரங்களில் உடலை புதைக்க வருபவர்கள், மின் விளக்கு வசதி இல்லாததால், டார்ச்லைட் வெளிச்சத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வெளிச்சம் போதியளவில் இல்லாததால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன், இந்த சுடுகாட்டில் இரவு நேரத்தில் டார்ச்லைட் வெளிச்சம் கொண்டு, இறந்தவரின் உடலை அப்பகுதி மக்கள் எரியூட்டினர். இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், கருங்குட்டை சுடுகாட்டில் மின் விளக்கு வசதி அமைக்கப்பட்டு உள்ளது.
10 minutes ago
12 minutes ago