உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைக்கு சாய்ந்த மின்கம்பம் 4 மாதமாக மின்வாரியம் கொர்

மழைக்கு சாய்ந்த மின்கம்பம் 4 மாதமாக மின்வாரியம் கொர்

நத்தப்பேட்டை:காஞ்சிபுரம் மாநகராட்சி 27வது வார்டு, நத்தப்பேட்டையில் இருந்து, முத்தியால்பேட்டைக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவும், தெரு மின்விளக்கிற்காக சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன், வடகிழக்கு பருவமழையின்போது பலத்த காற்றுடன் மழை பெய்தபோது, சாலையோர மின்கம்பம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதை சீரமைக்க வேண்டிய மின்வாரியத்தினர், மின் இணைப்பை மட்டும் துண்டித்துவிட்டு சென்றுவிட்டனர்.இதனால், மின்கம்பம்விழுந்த இடத்தில் செடி, கொடிகள் செழித்து வளர்ந்து, மின் கம்பம் புதர்களுக்குள் மறைந்துள்ளது. இருப்பினும், மின் ஒயர், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் அறுந்து கிடப்பதால், அவ்வழியாக செல்வோர் மின்கம்பியில் மின்சாரம் இருக்குமோ என, அச்சத்துடன் செல்கின்றனர்.தெரு மின்விளக்கு இல்லாததால், அப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களாக மின்வாரியத்தினர்மெத்தனமாக இருப்பதால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, மழைக்கு சாய்ந்த மின்கம்பத்தை சீரமைத்து இணைப்பு வழங்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை