உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசாணிமங்கலத்தில் விவசாயி தற்கொலை

அரசாணிமங்கலத்தில் விவசாயி தற்கொலை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம்,அரசாணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி, 64. இவருக்கு மனைவி மற்றும் திருமணமான மகன், மகள் உள்ளனர்.இவர், சமீபத்தில் தொண்டை புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்து வந்ததாக கூறப்படுகிறது.இதனிடையே, அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டு ஆண்டி, மன உளைச்சலில் இருந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதி சாலையோரம் உள்ள மின்மாற்றி மீது ஏறி திடீரென தன் இரு கைகளாலும் மின் கம்பியை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.இதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்திலேயே ஆண்டி, உயிரிழந்தார். உத்திரமேரூர் போலீசார் அங்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி