உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சாலவாக்கம் ஏரி நீர்வரத்து கால்வாய் துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

 சாலவாக்கம் ஏரி நீர்வரத்து கால்வாய் துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

உத்திரமேரூர்: பினாயூர் பாலாறில் இருந்து, சாலவாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை கரும்பாக்கத்தில் துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், சாலக்கத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டிலான ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு பினாயூர் பாலாற்றில் இருந்து, சாத்தணஞ்சேரி, கரும்பாக்கம், காவணிப்பாக்கம் வழியாக நீர்வரத்து கால்வாய் உள்ளது. கடந்த ஆண்டுகளில் மழைக்காலத்தில், இந்த கால்வாய் மூலம் சாலவாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்வது வழக்கம். காலப்போக்கில் பராமரிப் பின்மை மற்றும் சில இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பு போன்றவையால் ஏரிக்கு தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. இந்நிலையில், கரும்பாக்கம் விவசாய நிலங்களையொட்டி உள்ள இக்கால்வாய் துார்ந்து சில இடங்கள் பள்ளமாகவும், ஒரு சில இடங்கள் மேடாகவும் உள்ளது. இதனால், பள்ளமான பகுதிகளில் இருந்து மேடான பகுதிக்கு தண்ணீர் செல்லாத சால வாக்கம் ஏரிக்கு கால்வாய் இருந்தும், பாலாற்று தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், குறிப்பிட்ட சில இடங்களில் கால்வாய் குறுக்கே கான்கிரீட் மூலம் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் சிறு அளவிலான தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், கரும்பாக்கம் அருகே கால்வாய் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பின் முன் பகுதி பள்ளமாகவும், அதையடுத்த மேல் பகுதி மேடாகவும் உள்ளதால் அப்பகுதியை கடந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலவாக்கம் ஏரிக்கான பாலாற்று நீர்வரத்து கால்வாய் பகுதிகளை ஆய்வு செய்து சமமாக துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை