உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் இன்று வெள்ளி தேரோட்டம்

காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் இன்று வெள்ளி தேரோட்டம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் குமரகோட்டம், சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும், தை பொங்கல் தினத்தன்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையருடன், வெள்ளித்தேரில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வருவது வழக்கம்.அதன்படி, தைப் பொங்கல் தினமான இன்று காலை, மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது.இன்று, மாலை 6:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில், வள்ளி தெய்வானையருடன், சுப்பிரமணிய சுவாமி, நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வருகிறார்.விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் செய்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி