மேலும் செய்திகள்
வல்லக்கோட்டையில் கந்த சஷ்டி திருக்கல்யாண உத்சவம் விமரிசை
1 hour(s) ago
சிறுபினாயூர் ஏரி மதகை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
1 hour(s) ago
குன்றத்துார்:குன்றத்துார் நகராட்சியின் குப்பை வெளிவட்ட சாலையோரம்கொட்டி எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.குன்றத்துார் நகராட்சியில், 30 வார்டுகள் அமைந்துள்ளன. இங்கு சேகரமாகும் குப்பையை சேகரித்து வளம் மீட்பு பூங்காவில் தரம் பிரித்து அகற்ற வேண்டும். ஆனால், முறையாக குப்பை அகற்றப்படுவதில்லை.வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்துாரில் உள்ள குப்பை கிடங்கு வெளியே சாலையோரம் குப்பை கொட்டப்படுகின்றன.இவற்றில் உணவு தேடி நாய், மாடுகள் வருவதால் வெளிவட்ட சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.மேலும், குப்பை தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதில் இருந்து வெளியேறும் புகையால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. வெளிவட்ட சாலையோரம் உள்ள குப்பையை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago