| ADDED : ஜன 04, 2024 10:24 PM
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், சென்னக்குப்பம் ஊராட்சி, ஒரகடத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. அப்பகுதியில், முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.இந்த நிலையில், ஊராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்து சேகரமாகும் குப்பை மற்றும் உணவு கழிவுகளை, துாய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.அவ்வாறு வெளியேறும் குப்பையை டிராக்டர் வாயிலாக கொண்டு வந்து ஒரகடம் ஏரியில் கொட்டுகின்றனர். இதனால், ஏரியின் நீர் மாசடைகிறது.எனவே, நீர் நிலைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி, ஏரியில் குப்பை கொட்டுவதை தடுத்து, ஏரியை துார் வாரி, பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.