உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தி.நகர் அஞ்சுமன் பள்ளி அணி கால்பந்து போட்டியில் கோல் மழை

தி.நகர் அஞ்சுமன் பள்ளி அணி கால்பந்து போட்டியில் கோல் மழை

சென்னை,சென்னையின் எப்.சி., - இங்கிலாந்து நார்விச் சிட்டி எப்.சி., கிளப் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை, சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மைதானத்தில் துவக்கியது.இதில், 12 வயது மற்றும், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கு மட்டும் போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டியில், இரு பிரிவிலும், தலா, 32 அணிகள் என, மொத்தம் 64 அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று காலை நடந்த 14 வயது பிரிவினருக்கான முதல் போட்டியில், தி.நகர் அஞ்சுமன் மெட்ரிக் பள்ளி மற்றும் அரும்பாக்கம் முகமது சதக் மெட்ரிக் பள்ளி அணிகள் மோதின. போட்டியில் 7 - 0 என்ற கோல் கணக்கில், அஞ்சுமன் மெட்ரிக் பள்ளி அணி அபார வெற்றி பெற்றது. அதேபிரிவில், மற்றொரு ஆட்டத்தில், திருவள்ளூர் ஹார்ட்புல்னஸ் பள்ளி, 2 - 1 என்ற கோல் கணக்கில், திருவேற்காடு சவீதா ஈகோ பள்ளியை வீழ்த்தியது.அதேபோல், 12 வயது பிரிவினருக்கான போட்டி ஒன்றில், திருவேற்காடு சவீதா எக்கோ பள்ளி, 1 - 0 என்ற கோல் கணக்கில், தி.நகர் அஞ்சுமன் பள்ளியை தோற்கடித்தது. போட்டிகள், தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை