மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை
24-Oct-2025
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர லிங்கனார் சித்தரின் குருபூஜை விழா, நாளை நடக்கிறது. காஞ்சிபுரத்தில் வாழ்ந்து, ஜீவசமாதி அடைந்த, சங்கர லிங்கனார் சித்தரின், ஜீவசமாதி சின்ன காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெரு, பணாமணீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அனந்ததீர்த்த குளத்தின் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் சங்கர லிங்கனார் சித்தரின் ஜீவ சமாதியில் வழிபட்டு வருகின்றனர். சங்கர லிங்கனார் சித்தரின் கோவில் குறித்து, காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற சங்கர லிங்கனார் சித்தரின் குருபூஜை விழா, நாளை காலை 9:00 மணி முதல்,- பிற்பகல் 12:00 மணி வரை நடக்கிறது. இதில், சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது.
24-Oct-2025