உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புகார் தந்த பெண்ணை திட்டிய தலைமை காவலர் சஸ்பெண்ட்

புகார் தந்த பெண்ணை திட்டிய தலைமை காவலர் சஸ்பெண்ட்

ஓட்டேரி:புளியந்தோப்பு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த, 37 வயது பெண், தன் 'ஸ்கூட்டர்' ரக வாகனம் திருடு போனதாக, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், அவரது வாகனத்தை புதுப்பேட்டையில் இருந்து கைப்பற்றினர்.இதையறிந்த பெண், தன் வாகனத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி, தலைமை காவலர் வேல்முருகனிடம் கோரியுள்ளார்.அதற்கு காவலர் வேல்முருகன், நீதிமன்ற விசாரணைக்கு பிறகே வாகனம் ஒப்படைக்கப்படும் எனக் கூறியுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.அப்போது காவலர் வேல்முருகன், அந்த பெண்ணை மரியாதைக் குறைவாக, கடுமையான வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து அப்பெண், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் புகார் அளித்தார்.விசாரித்த துணை கமிஷனர், பொதுமக்களுக்கான பணியின்போது, மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாக தலைமைக் காவலர் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை