உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குப்பை கொட்டும் இடமாக மாறிய நெடுஞ்சாலை; மாத்துாரில் அடாவடி

குப்பை கொட்டும் இடமாக மாறிய நெடுஞ்சாலை; மாத்துாரில் அடாவடி

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் மாத்துார் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, ஒரகடம், வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.இங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையோரம் கொட்டி குவிக்கப்படுகிறது.மேலும், அப்பகுதியில் இயங்கி வரும் 10க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி கடைகளின் கழிவுகளை, இரவு நேரங்களில் சாலையோரங்களில் வீசி செல்கின்றனர்.இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் துர்நாற்றத்தால், நோய் தொற்று பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.மேலும், குப்பையில் உணவு தேடி வரும் கால்நடைகள், சாலையின் குறுக்கே செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, சாலையோரங்களில் இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை