உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிவுநீர் பிரச்னைக்கு சேதமான சாலை நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு

கழிவுநீர் பிரச்னைக்கு சேதமான சாலை நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் செங்கழுநீரோடை வீதியில் காய்கறி மார்க்கெட், உணவகம், அரசு டாஸ்மாக், நகை, பலசரக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன.வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், கடந்த மாதம் பாதாள சாக்கடை பைப்பில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்தோடியது.இதையடுத்து மாநகராட்சி சார்பில், கழிவுநீர் எந்த இடத்தில் கசிவு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக, 40 மீட்டருக்கு மேல் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது.ஆனால், கழிவுநீர் உடைப்பு சீரமைத்த பின், சேதமான சாலையை மாநகராட்சி நிர்வாகம் பழையபடி சீரமைக்கவில்லை. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இதனால், அடிக்கடி விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.மேலும், விபத்தை தடுக்கும் வகையில், பல்வேறு கோவில்களின் தேரோடும் வீதியான செங்கழுநீரோடை வீதியை, முறையாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.இந்நிலையில், மாநகராட்சியால் கழிவுநீர் பிரச்னைக்காக சேதப்படுத்திய 40 மீட்டர் சாலையை, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், நேற்று புதிதாக தார்ச்சாலை அமைத்து சீரமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை