உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மனைவி, மகன் கண் எதிரே விபத்தில் கணவன் பலி

 மனைவி, மகன் கண் எதிரே விபத்தில் கணவன் பலி

ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அருகே, லாரி மோதியதில், மனைவி மற்றும் மகனுடன், மொபட்டில் சென்ற நரிக்குறவர் உயிரிழந்தார். சுங்குவார்சத்திரம் அருகே, சந்தவேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆப்பிள், 40, நரிக்குறவர். நேற்று முன்தினம் இரவு, 'சூப்பர் எக்ஸ்.எல்' மொபட்டில், மனைவி சங்கீதா மற்றும் மகன் ஆதியுடன், 'ஐய்ச்சர்' வாகனத்தில் இருந்து சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சுங்குவா ர்சத்திரம் மேம்பாலம் அருகே வந்தபோது, சர்வீஸ் சாலையில் இருந்து, வாலாஜாபாத் செல்ல திரும்பிய லாரி கட்டுப்பாட்டை இழந்து, மொபட் மீது மோதி யது. இந்த விபத்தில், ஆப்பிள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி சங்கீதா மற்றும் ஆறு வயது மகன் ஆதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், காயமடைந்த இருவரையும் மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சுங்குவார்சத்திரம் போலீசார், விபத்தில் உயிரிழந்த ஆ ப்பிள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்து வமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை