| ADDED : பிப் 16, 2024 10:36 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தலைமை அஞ்சலகத்தில், அஞ்சல் துறை ஊழியர்களுக்கு, பணி பயிற்சி மையம் திறப்பு விழா, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. அஞ்சல் துறை தலைவர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார்.அஞ்சல் துறை தலைமை இயக்குனர் ஸ்மிதா குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அஞ்சல் துறை ஊழியர்கள் பயிற்சி மையத்தை ரிப்பன் வெட்டி அவர் திறந்து வைத்தார்.காஞ்சிபுரம், அரக்கோணம் அஞ்சல் கோட்ட ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, அஞ்சல் துறையினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குனர் மனோஜ், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.