மேலும் செய்திகள்
லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி
21 minutes ago
சாலை விபத்தில் மூதாட்டி பலி
22 minutes ago
சத்ய சாய்பாபா பிறந்தநாள் விழா
22 minutes ago
கரும்பாக்கம்: கரும்பாக்கத்தில் இருந்து, காவணிப்பாக்கம் செல்லும் மண் பாதையை தார் சாலையாக மாற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது காவணிப்பாக்கம் கிராமம். இக்கிராம வாசிகள், வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் இந்தியன் வங்கி கிளை சார்ந்த சேவைகளுக்கு அருகாமையில் உள்ள கரும்பாக்கம் கிராமத்திற்கு செல்கின்றனர். காவணிப்பாக்கத்தில் இருந்து, கரும்பாக்கம் செல்ல 3 கி.மீ., துாரம் இடைவெளி உள்ளதால், அப்பகுதியினர் தனியார் நிலங்களை பயன்படுத்தி ஒத்தையடி பாதை வழியாக சென்று வந்தனர். இதேபோல, கரும்பாக்கம் கிராமத்தினரும் தங்களது உறவினர் வீடுகளுக்கும், வியாபார பணி காரணமாகவும் காவணிப்பாக்கம் சென்று வர தனியார் விவசாய நிலங்களின் ஒத்தையடி பாதையை பயன்படுத்தி வந்தனர். இதனால், கரும்பாக்கம்- காவணிப்பாக்கம் இடையே, பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்தது. அக்கோரிக்கையை ஏற்று, அப்பகுதிகளின் நில பட்டா உரிமையாளர்களிடம் அனுமதி கேட்டு, கரும்பாக்கம்- காவணிப்பாக்கம் கிராம இணைப்பாக ஊராட்சி நிர்வாகம் சார்பில், இரு ஆண்டுகளுக்கு முன் மண் பாதை ஏற்படுத்தப்பட்டது. காவணிப்பாக்கம் - கரும்பாக்கம் இடையிலான மண் பாதையை தார் சாலையைாக மாற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
21 minutes ago
22 minutes ago
22 minutes ago